துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

பொத்துஹெர கந்தேவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கஹவத்த பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஐந்து நாட்களுக்கு முன்னர் மொரகொல்ல வத்தை என்ற பகுதியில் தொழிலாளியாக சென்றவர் என்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள கந்தேவத்த வனப்பகுதியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து துப்பாக்கியொன்றையும் பொலிஸார்  கண்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்