
வீதி விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு
சீதுவ – கொடுகொட வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதி விபத்தொன்றில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பம் பதிவாகியுள்ளது.
கொடுகொட வீதியில் பஞ்சானந்தா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 14 வயது மகனும் 45 வயதுடைய தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
