
கால்நடை வளங்களை மீளக் கட்டியெழுப்ப இந்தியா ஆதரவு
கால்நடை வளங்களை மீளக் கட்டியெழுப்ப இந்தியா ஆதரவு
இலங்கையின் கால்நடை வளங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், ஜனாதிபதி முன்னிலையிலும் இந்த இணக்கப்பாடு வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர பசுக்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது இந்தியாவின் கால்நடை பண்ணைகளில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்ப வசதிகள் இலங்கைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம், இலங்கையின் பால் உற்பத்தித் தொழில்துறை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, முழுத் தொழில்துறையும் 19 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
