நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவரை காணவில்லை

நாடாளுமன்றத்தை அண்மித்த கிம்புலாவல பிரதேசத்தில் தியவன்னா ஓயா பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட திவவன்னா ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பயணித்த படகொன்றே இவ்வாறு கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாகவும், அதிகாலை 4.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படகிலிருந்த மற்றைய நபர் கரையேறி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.