
கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
கொரோனா தொற்று குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
அமொிக்காவின் நியூயாா்க் மேயர் அலுவலகத்தில் இருந்து வெளியான ஒர் அறிவிப்பு. எலிகள் என்றாலே பெரும் தொல்லைதான் என்றாலும் நியூயாா்க்கில் உள்ள சுரங்கப் பாதைகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகாில், பூங்கா, சுரங்கப்பாதை, குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட 79 எலிகளை ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 79 எலிகளில் 16 எலிகளுக்கு கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான, ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்நிலையில் எலிகள் மீதான சோதனைகளை மேலும் அதிகாித்திருப்பதாவும், எலிகளிடமிருந்து வேறு விலங்குகளுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்திவருவதாகவும் ஆராய்ச்சியாளா்கள் தொிவித்துள்ளனா்.
மனிதா்களை பாதிக்கும் தொற்று நோய்கள் பெரும்பாலும் விலங்குகளிடமிருந்து பரவக்கூடியவை என பெரும்பலான ஆய்வு முடிவுகள் கூறும் நிலையில் எலிகளால் மீண்டும் தொற்று அதிகாிக்குமா என அச்சம் எழுந்துள்ளது. ஆனால் அதேவேளையில் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சாா்ஸ் வகை வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து பரவக்கூடியது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், அதனால் எலிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை என்கிறது அமொிக்காவின் சிடிசி எனப்படும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
