தம்பதியினர் மறந்தும் கூட இந்த வார்த்தைகளை சொல்லக்கூடாது

தம்பதியினர் மறந்தும் கூட இந்த வார்த்தைகளை சொல்லக்கூடாது.

‘சொல்லை கொட்டினால் அள்ள முடியாது’ என சொன்னது வார்த்தை மட்டும் கிடையாது, உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படக்காணம் கோபத்தில் நாம் கொட்டித்தீர்க்கும் வார்த்தைகள் தான். குறிப்பாக கணவன் – மனைவி சண்டையின் போது கோபம், ஆற்றாமை, வெறுப்பு காரணமாக துணையை காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளை உபயோகித்துவிடுகிறோம்.

கோபத்தில் அர்த்தமில்லாமல் பேசிவிட்டாலும், பின்னர் சரி செய்வது கடினம். இடம், பொருள் பார்க்காமல் உபயோகிக்கப்படும் வார்த்தைகள் தான், திருமண வாழ்க்கையில் விரிசலை உருவாக்குவதில் பெரும் பங்கை வகிக்கின்றன.

கணவன், மனைவி என்றில்லாமல், உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் நீங்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத சில வார்த்தைகள்

1.’உன் கூட இருந்து சலிச்சு போச்சு’:  சின்ன சண்டைகளுக்கு கூட வீசப்படும் இந்த வார்த்தை உங்களது துணையின் இதயத்தை சுக்குநூறாக உடைக்க கூடியது. இந்த வார்த்தை கடுமையானது மட்டுமல்ல, ‘என் மீது அன்பே இல்லை’, ‘இத்தனை கால வாழ்க்கை அவ்வளவு தானா’ போன்ற எதிர்மறையான எண்ணங்களை கொண்டு வரும். இத்தகைய எதிர்மறையான கருத்துக்கள், ஒப்பீடுகள் உறவுகளுக்கு சிக்கலை மட்டுமல்ல, பிரிவையும் கொண்டு வரும்.

2.’நான் சொல்வதை ஏன் கேட்கிறீர்கள் இல்லை?’:  உங்கள் துணை நீங்கள் சொல்லும் எதையுமே கேட்க மாட்டார் என்றாலும், சண்டையின் போது இந்த வார்த்தையை பயன்படுத்துவது தேவையில்லாதது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தொடர்பு கொள்வதை ஒரு பொருட்டாக நினைக்காத போது, புறக்கணிக்கப்படும் போது அல்லது உங்கள் துணை குறுகிய மனப்பான்மையுடன் செயல்படும் போது இது கட்டுப்படுத்தக்கூடிய வார்த்தையாக பயன்படுத்தக்கூடும். அதிக கோபமாக இருக்கும்போது இந்த வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்வதால் சண்டை தான் வளருமே தவிர, புரிதல் பிறக்காது.

3.’நீ ரொம்ப சுயநலவாதி’:  உங்கள் இணை உண்மையாகவே சுயநலம் மிக்கவராக இருந்தாலும், கோபம் கொந்தளிக்கும் தருணத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. இது ஒரு விமர்சன மற்றும் நியாயமான கருத்தாக இருந்தாலும், உறவில் தூரத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். இதனால் உறவுக்குள் ஏற்படும் விரிசலை சரி செய்வது மேலும் சிக்கலானதாக மாறிவிடும்.

4.’நீ மாறிவிட்டாய்’ : மாற்றம் ஒன்றே மாறாது என்பதை தம்பதிகள் உணர வேண்டும். காதலித்த காலத்திலோ, திருமணமான புதிதிலோ இருப்பது போல் ஒருவர் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஒரு நபர் அல்லது உறவு எப்போதும் ஒரே மாதிரியாகவோ அல்லது நிலையானதாகவோ இருக்க முடியாது. ஆரோக்கியமாகவும், கலகலப்பாகவும், செழிப்பாகவும் இருப்பதற்கு தம்பதிகள் இருவரும் தொடர்ந்து பரிணாமம் மற்றும் மாற்றம் பெற வேண்டும்.

இவ்வாறான வார்த்தைகளை உங்கள் திருமண வாழ்வில் தவிர்த்து கொண்டால் வாழ்க்கை சிறப்பு பெறும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்