மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இன்று வியாழக்கிழமை காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இதன்போது முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்கிரமசிங்க ஆகியோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இவர் கடந்த திங்கட்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.