
3 பெண்கள் கழுத்து நெரித்து கொலை
கடந்த வருடம் 2022 நவம்பர் மாதம் 2ம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதுடன் கடந்த மாதம் எல்பிட்டியவில் இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாகவும், எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மூன்று பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர்களது உடமைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், யகிரல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தங்க நெக்லஸ்இ 03 ஜோடி காதணிகள் மற்றும் தொலைபேசி என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்இ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
