
இரு குழுக்கழுக்கிடையே கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு
இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்து 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்குருவத்தோட்ட, படகொட சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய உயிரிழந்தவரின் சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை படகொட பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
