‘புரு மூனா’வை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை

ரவிந்து சங்க டி சில்வா என்ற ‘புரு மூனா’வை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒன்பது கொலைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புரு மூனா நேற்று வெள்ளிக்கிழமை அவிசாவளை நீதிமன்றில் சரணடைய வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

‘புரு மூனா’ எனப்படும் ரவிந்து சங்க டி சில்வா, ஹங்வெல்ல பிரதேசத்தில் கடையொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்த வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொன்றது உள்ளிட்ட பல கொலைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஆவார்.

இவர் அண்மையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதும், விமான நிலைய பொலிஸாரிடம் இருந்து மிகவும் சாமi;த்தியமாக தப்பிச் சென்றிருந்தார்.