அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை எந்தவொரு தேர்தலும் நடைபெறாது?

அடுத்த வருடம் தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளதாக இன்று சனிக்கிழமை தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகும் வகையில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தை ஜனாதிபதி தயார்படுத்துவதாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களிடமும் ஜனாதிபதி இது தொடர்பில் பேசியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

எனினும்,  நடைபெறவிருந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை எனவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.