
தாயுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை : மகளை கடத்திய வர்த்தகர்
தாயுடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை : மகளை கடத்திய வர்த்தகர்
16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கைது செய்ய கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி ஹந்தான பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சிறுமி கடந்த புதன்கிழமை பிற்பகல் கடத்தப்பட்டதாக தாயின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தொழிலதிபரிடம் வழங்கிய காசோலை காரணமாக இக்கடத்தல் இடம்பெற்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பெண்ணிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு புதன்கிழமை இரவு குறித்த வர்த்தகர் மாவனெல்லையில் பஸ்ஸில் ஏற்றி சிறுமியை வீட்டிற்கு செல்வதற்கு விடுவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சிறுமியின் தாய் குறித்த வர்த்தகருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குழந்தைக்கு எந்தவிதமான உடல்ரீதியாகவோ அல்லது வேறு காயங்களோ ஏற்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
