இலங்கையரான குற்றவாளிக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்

இலங்கையரான குற்றவாளிக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்

ஹங்வெல்ல மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல கொலைகளுக்கு தலைமை தாங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கரவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதற்கு மேல் மாகாண தென் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் அவிசாவளை நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்மையில் ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற உணவகம் ஒன்றின் உரிமையாளரின் கொலை சம்பவம் டுபாயில் இருந்து வந்த ஒருவராலேயே நிகழ்த்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்திய புரு மூனா என அழைக்கப்படும் ரவிது வர்ண ரங்கன கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்த போது தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்