போதைப்பொருள் பரவுவதை தடுப்பது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்

சமூகத்தில் புதிய சட்டவிரோத போதைப்பொருள் பரவுவது தொடர்பான பணப்புழக்கத்தை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய புதிய கலால் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என நிதியமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.

1912 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கலால் கட்டளைச் சட்டம் 1200 திருத்தங்கள் மற்றும் அறிவிப்புகளால் மாற்றப்பட்டு சிக்கலாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க