பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1521 மனுக்கள் தாக்கல்

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக 1521 மனுக்கள் தாக்கல்

பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பல்வேறு தரப்பினரால், இதுவரையில்  1,521 அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்று வியாழக்கிழமை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த விக்ரம முன்வைத்த சமர்ப்பணத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்