
அம்பாறை : விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் – சென்று கொண்டிருந்த பேருந்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தினைச் சந்தித்துள்ளார்.
இவர் சென்ற மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ள நிலையில், படுகாயமடைந்த இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
