சிவனொளிபாத மலைக்கு செல்லும் பகுதியில் நோய்த்தொற்று பரவுகிறதா?

 

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பகுதியில், லிஸ்டீரியா நோய்த் தொற்று பரவுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா,

இது தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமையால், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது. தற்போது வரை லிஸ்டீரியா நோய் தொற்றுடன் ஒருவர் மாத்திரமே துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினர் மற்றும் சமூக வைத்திய நிபுணர்கள் ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த ஆய்வுகள் முடிவடைந்த பின்னர், மக்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படும்.

தற்போதைய நிலையில், விசேடமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், வழமையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், சமூக வைத்திய நிபுணர் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்