
சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவிப்பு
சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவிப்பு.
நான்கு சோவியத் கால மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக, போலந்து அறிவித்துள்ளது.
ரஷ்யா கடந்த ஆண்டு படையெடுத்த பிறகு உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பிய முதல் நேட்டோ நாடாக போலாந்து மாறியுள்ளது.
குறித்த போர் விமானங்கள் எதிர்வரும் நாட்களில் அனுப்பப்படுமென போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா தகவல் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் ஓலேனா கோண்ட்ராட்யுக், மேலும் பல நாடுகள் இதை பின்பற்றும் என நம்புவதாக கூறினார்.
உக்ரைனிய விமானிகள் பறக்க பயிற்சி பெற்ற சோவியத் காலத்து விமானங்களை அனுப்ப மற்ற நேட்டோ நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
இதேவேளை, நேட்டோ தரநிலை விமானங்களில் உக்ரைன் விமானிகளுக்கு பிரித்தானியா, பயிற்சி அளித்து வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
