
3 ஆவது நாளாக இன்றும் சுகயீன விடுமுறை
-மூதூர் நிருபர்-
சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை 3ஆவது நாளாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
இதனால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுடைய நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன் தினத்தில் இருந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்