தியத்தலாவ விபத்து: சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிறுமி ஒருவர் நேற்றையதினம் புதன் கிழமை இரவு சிகிச்சை பலம் இன்றி உயிர் இழந்துள்ளார்.

வெலகெதர கல்லேதண்ட வெளிமடை பகுதியைச் சேர்ந்த டபிளியு.பி.சத்சரணி காவின்யா (வயது – 16) என்ற சிறுமியே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி பொக்ஷில் ( மோட்டார் கார்) பந்தையத்தில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் மரணித்ததுடன் 21 பேர் காயமடைந்து தியத்தலாவ மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் குறித்த சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்