டிப்பரும் தனியார் பேருந்தும் மோதி விபத்து
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நவாலி வீதியில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில், டிப்பரும், தனியார் பேருந்து ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பேருந்தும், யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
