
ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் வெவ்வேறு இடங்களில் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து கொடியிடப்பட்ட மயுரி நாரி கப்பல், ஜப்பான் கொடியிடப்பட்ட ஒன் மெஜஸ்டி கப்பல், மார்ஷல் தீவுகள் கொடியிடப்பட்ட ஸ்டார் க்வினெத் கப்பல் ஆகியவையே தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் எந்தச் சூழலில் அல்லது யாரால் நடத்தப்பட்டன என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
