
கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயம்
-மஸ்கெலியா நிருபர்-
சிவனொளிபாத மலையில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததால் மூவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா பகுதியில் இருந்து நேற்று வியாழக்கிழமை சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்கு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திரும்பி கொண்டிருந்த போது ஹட்டன் பிரதான வீதியில் ரொக்வூட் தோட்ட பகுதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்து கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நோர்வூட் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
