போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகன மோசடி செய்த 3 சந்தேகநபர்கள் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், களனி பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்புலனாய்வுபிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டள்ளது.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, ​​போலி ஆவணங்களுடன் கார் ஒன்றையும், துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 19 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

நிட்டம்புவ, ரட்டவன, மற்றும் மகோல ஆகிய பகுதிகளை சேர்ந்த, 26, 35 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.