திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் ரக வாகனம் ஜாவத்தை பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் ரக வாகனமும், கார் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்