திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா

-திருக்கோவில் நிருபர் கி.மிதுர்ஷன்-

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இப் பொங்கல் விழா நிகழ்வானது திருக்கோவில் பிரதேச கல்வி வலயத்தினுடைய வலயக்கல்விப்பணிப்பாளர் சு.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.