உறங்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞன் கடந்த திங்கட்கிழமை இரவு உறங்கச் சென்றுள்ள நிலையில்இ நேற்று செவ்வாய்கிழமை காலையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.
வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட வேளைஇ குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என யாழ்ப்பாணம் கோப்பாய் தடைவியல் பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
