
மாணவன் கசிப்பு அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்தியதையடுத்து ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார் இதையடுத்து ஆசிரியர்கள் அவரிடம் வினாவிய போது பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
