யாழ்.மாவட்ட செயலகத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ளது வடமாகாண கொன்சியூலர் அலுவல்கள் பிரிவுக்கு வருகை தரும் பொதுமக்கள் தமது வருகையை மின்னியல் சந்திப்பு (ஆன்லைன்) முறை மூலம் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் மின்னியல் அனுமதி மூலம் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையானது கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான இணையவழி அனுமதிகளை வழங்குகிறது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கொன்சியூலர் பிரிவு நாளொன்றுக்கு 75 பேருக்கு மட்டும் மின்னியல் அனுமதிகளை வழங்குகிறது.

தற்போது கனடா நாட்டுக்கு செல்வதற்காக பலர் குறித்த பிரிவுகு வருகை தருவதுடன் மின்னியல் அனுமதிகளை பலர் பெறாது வருவதால் திரும்பிச் செல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மின்னியல் சந்திப்பு நியமன சேவையைப் பெற விரும்புபவர்கள் 228 (கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் அல்லது 1228 நிலையான அழைப்புத் தொலைபேசி பாவனையாளர்கள்) மற்றும் மொபிடெல் மின்னியல் சந்திப்புக்கு அழைத்து நியமனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (யோன் ஏன்டா ஆல்ப்) ஊடாகவும் தொடர்பு கொள்வதன் மூலம் வீன் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்