வெங்காயத்தின் விலை மிக வேகமாக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை மொத்த விலையில் இன்று புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெங்காயம் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதையடுத்து, விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இதனிடையே, உள்நாட்டு சந்தைக்கு பாரிய அளவில் பெரிய வெங்காயத்தை வழங்கிய விவசாயிகள் பலர் விளைச்சலுக்குரிய விலை கிடைக்காமை, உரிய நேரத்தில் உரம், கிருமிநாசினி கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் தற்போது பெரிய வெங்காய உற்பத்தியிலிருந்து விலகியுள்ளமை தெரியவந்துள்ளது.