நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரிப்பு!
இலங்கையில் தங்கவிலை நேற்று திங்கட்கிழமை 4,000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை 7,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
