சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்தது!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று செவ்வாய்க்கிழமை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,008.15 டொலராக உயர்ந்துள்ளது.

இதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றைய தினம் 80.57 டொலராக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.