மட்டு கரடியனாறில் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை இன்று ஞாயிற்று கிழமை முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழே குறித்த நிலக்கடலை பதப்படுத்தும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மைலம்பாவெளி, செங்கலடி மாதுளை பண்ணையையும் ஜனாதிபதி பார்வையிட்டமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்