நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொடி லெசி குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்!
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி எனப்படும் , ஜனித் மதுசங்க 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜனிதா மதுசங்க காலி மாவட்ட குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
