
மத்ரஸா மாணவன் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்
காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் எம்.எஸ்.முஷாப் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது என , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபை மற்றும் புத்திஜீவிகள் ஜனாஸா நலன் நலன்புரி அமைப்பு, ஊர் நலன் விரும்பிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எம்.எஸ்.முஷாப் (வயது-13) 2023.12.05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்துல் சபீலிற் ரஷாத் என்னும் குர்ஆன் மத்ரஸாவில் வபாத்தானார். அவரின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இத்தருணத்தில் இவரின் இழப்பினால் துயருற்றிருக்கின்ற குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவருக்கும் சாய்ந்தமருந்து – மாளிகைக்காடு
ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பொறுப்பாளர் சபை மற்றும் புத்திஜீவிகள் ஜனாஸா நலம்புரி அமைப்பு, ஊர் நலன் விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

