அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் கடமையினை பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, அனுபமா மங்கள விக்ரமாராச்சி, தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.