இ.போ.ச பேருந்து ஒன்றினால் மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியம்!

-மஸ்கெலியா நிருபர்-

ஹட்டனில் இருந்து கெப்பிட்டிபொல நோக்கி பயணிக்கும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மிகவும் மோசமாக புகையை கக்கி பயணிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைந்து, மனிதர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன், பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்கள் இந்த புகையை சுவாசிப்பதால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அரச பேருந்தை பாவணையில் இருந்து இடைநீக்கம் செய்து, அந்த பேருந்தை திருத்தியமைத்து மீண்டும் போக்குவரத்தில் ஈடுபட வைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.