ஊழியராக அறிமுகமான மனித ரோபோ அமேகா
மியூசியம் ஒஃப் ஃபியூசர்( Museum Of Future) என்ற அருங்காட்சியகத்தில் வேலைச் செய்ய ரோபோவை வேலைக்கு அமைத்துள்ளனர். அதனின் வீடியோ வைரலாகி வருகிறது.
அமேகா என்ற பெயரிடப்பட்ட அந்த ரோபோ மிகவும் அதிநவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின் ஒருவராக நிர்வாகம் அறிவித்துள்ளது. அமேகா ரோபோவின் வீடியோ அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அமேகா, அருங்காட்சியகத்திற்கு வருபவர்களை வரவேற்கும், மேலும் வருபவருக்கு அருங்காட்சியகத்தின் திசைக்காட்டியாகவும் செயல் படுகிறது. அமேகா பல மொழிகளில் பேசும் தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.