𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினர் மாணவர்களுக்கு செய்த மனிதாபிமான செயல்!
கலாசார அலுவல்கள் திணைக்களம் சுவாமி விபுலாநந்தரின் நூறாவது துறவற ஆண்டினை முன்னிட்டு இந்துசமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2024 எனும் தலைப்பில் போட்டி நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட 17 அறநெறி பாடசாலைகளிலிருந்து 200 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்
இதன்போது கல்முனை பிரதேச கலாசார உத்தியோகத்தரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஸ்பாண்ட் (𝗦𝗣𝗔𝗡𝗗) அமைப்பினர் மூலமாக குளிர்பானம் வழங்கப்பட்டது.
தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலையில் மாணவர்களுக்கு இவ்வாறான ஒரு மனிதாபிமான செயலை ஸ்பாண்ட் (𝗦𝗣𝗔𝗡𝗗) அமைப்பினர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்