வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்
நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவைக் குறிக்கும் ‘வெப்பச் சுட்டெண்’, இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும்.
வவுனியா, மன்னார், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், தேவையற்ற ரீதியில் வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
