மாணவர்களை பாராட்டி கௌரவித்த ஆளுனர்

Click to teach Gmail this conversation is important

திருகோணமலை இந்து கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கல்லூரி அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன் போது, திறமை சித்தி பெற்ற மாணவர்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் திருகோணமலை மாநகர சபை மேயர், கல்வி துறைசார் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.