மறைத்து வைக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் முட்டைகளுக்கு நடந்த கதி!

மஹகும்புக்கடலை வல்பலுவ வனப்பகுதியில் கெட்டுப்போனதாக சந்தேகிக்கப்படும் அதிகளவான முட்டைகளை யாரோ ஒருவரால் கொண்டு வந்து வீசப்பட்டுள்ளதாக பிரதேசவாசி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் பொலிசார் நேற்று புதன்கிழமை வனப்பகுதிக்கு சென்றனர்.

மஹகும்புக்கடலை வல்பலுவ வனப்பகுதியில்  உள்ள வெறிச்சோடிய இடத்தில் ஏராளமான முட்டைகள் நசுக்கப்பட்டு சிதறிக் கிடந்தன.  மறைத்து வைக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம்  முட்டைகள் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்