மன்னரை நோக்கி பறந்து வந்த முட்டை
பிரிட்டனில் 70 ஆண்டு காலம் ராணியாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் எலிசபெத் ராணி. கடந்த செப்டம்பர் மாதம் இவர் தனது 96 வயதில் உயிரிழந்தார். அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்ற எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா, அந்நாட்டின் யார்க்ஷெரி மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றனர். யார்க்ஷெரி மாகாணத்தின் மிக்லிகெட் பார் பகுதியில் மன்னர் மற்றும் ராணி வருகை தந்த நிலையில், அவர்களை வரவேற்க அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குவித்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தை நோக்கி மூட்டை வீசினார். இந்த முட்டை மன்னர் சார்லஸ் மீது விழாமல் தரையில் விழுந்தது. உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு சூழ்ந்துகொண்டு அரச குடும்பத்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ந்த தாக்குதலை நடத்தியவர் 23 வயது இளைஞர் எனவும் இவர் ஒரு கல்லூரி மாணவர் எனவும் தெரியவந்துள்ளது. முட்டை வீசிய அந்த நபர் அடிமைகளின் ரத்தத்தால் இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது என கோஷம் எழுப்பினார். அந்நாட்டில் நிலவிய அடிமை முறை தொடர்பாக அரச குடும்பத்தின் மீதான வெறுப்பே இந்த தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.