நெடுந்தாரகை படகின் நங்கூரத்தை காணவில்லை!

-யாழ் நிருபர்-

நெடுந்தாரைப் படகின் நங்கூரம் நேற்று வெள்ளிக்கிழமை கடலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தாழமுக்க காலத்தில் படகின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நெடுந்தீவின் மற்றொரு பகுதியில் தரித்து விடுவதற்காக குறித்த படகு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போதே நங்கூரம் கடலில் காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்