மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய பதாகை
மட்டக்களப்பு நகர்ப் பகுதிகளில் “மாவீரர்களின் பணத்தைத் திருடிய தர்மலிங்கம் சுரேஸ் ஒரு திருடன்” எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
சமூகச் செயற்பாட்டாளரான இவரின் படத்தைப் பிரசுரித்து இத்துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
சின்னக் குழந்தை நீ, நம்ம சாணக்கியன் அண்ணனுடன் மோத முடியுமா? நீ இன்னும் வளர வேண்டும்’, உனது நாய் புத்தியை உன்னோடு வைத்துக்கொள்’, ‘நீ ஒரு மகா திருடன் என்று முழு மட்டக்களப்புக்கும் தெரியும்’ போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் மட்டக்களப்பு நகர்பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.