
தேசிய மட்டத்தில் தனது முத்திரையை பதித்த தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்
-மஸ்கெலியா நிருபர்-
நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் தனது முத்திரையை பதித்துள்ளது.
அகில இலங்கை சமூக விஞ்ஞான போட்டிகள் – 2025 இல், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் வியக்கத்தக்க வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.
தரம் 9 மற்றும் 10 : அகில இலங்கை ரீதியில் இரண்டு முதலாம் இடங்கள். மொத்தமாக 10 இடங்களை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கும், திறமையை வெளிப்படுத்திய அன்பு மாணவர்களுக்கும், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், உப அதிபர், பகுதி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
