கேட்கும் வெடிச்சத்தங்களால் கட்டார் மற்றும் குவைட் போன்ற பகுதிகளிலும் பதற்றம்!

கட்டார் தலைநகர் டோஹாவிலும் (Doha),பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கட்டாரை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே வெடிச்சத்தங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே வேளை குவைட்டிலும் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, சவூதி அரேபியாவின் ரியாத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.