SLT ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)  பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

(SLT)  இன் 18 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் வேலைநிறுத்தப் போராட்டம்  இன்று வெள்ளிக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)  ஊழியர்கள் கொழும்பு – கோட்டையில் உள்ள தொலைத்தொடர்பு தலைமையகத்திற்கு முன்பாக தமது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.