தெல்தோட்டை-போப்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி
தெல்தோட்டை போப்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி, பாடசாலை மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இவ் விழாவானது பாடசாலை அதிபர் திரு.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், ஹோவாஹேட்ட பிரதேச சபையின் உறுப்பினரும், சமூக சேவகருமான முனீர் சாதிக் மற்றும் ஜேகதிஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் விழாவிற்கு, கண்டி வலய கல்வி ஆசிரியர் ஆலோசகர்களும், அருகிலுள்ள பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.



