
புதிய பணிப்பாளரிற்கு பாபுசர்மா வாழ்த்து
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ள ய.அனிருத்தனனிற்கு சர்வதேச இந்து மத பீடத்தின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்தார் .
அ.உமா மகேஸ்வரன் கடந்த எட்டு வருடங்களாக பணிப்பாளராக கடமையாற்றி வடமாகாண சபைக்குப் பிரதிப் பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து, ய.அனிருத்தனன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக, பொதுச் சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளராக, ஒட்டி சூட்டான் பிரதேச செயலாளராக மற்றும் இலங்கை அபிருத்தி நிர்வாக சேவை நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவுப் பணிப்பாளராக என பல்வேறு பதவிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றிய இவர் இலங்கை நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரியாகும்.
இவரது பதவிக்காலத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிகள் மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துவதாக சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்தார் .
